`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் இருந்துதான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டது. குறிப்பாக 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சி அதை நிறைவேற்றவில்லை. தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான நல்லாறு, ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை விரைவில் செயல்படுத்தப்படும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0