நரம்பியல் நோய்களுக்கான முக்கிய காரணங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

Aug 9, 2025 - 15:47
 0  0
நரம்பியல் நோய்களுக்கான முக்கிய காரணங்கள்

நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் ஒட்டுமொத்த உடம்பையும் கட்டுப்படுத்தும் மையமாக திகழ்கிறது. அத்துடன் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் அவற்றினுடைய செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பது நரம்பு மண்டலம் ஆகும்.

நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகள் பலவீனமடைந்து, உடலின் பல்வேறு பகுதிகளில் செயல்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவாக கைகால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி, பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில சமயங்களில், இது தசைச் சுருக்கங்கள், நடுக்கம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

• சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் என்பது நரம்புத்தளர்ச்சிக்கு மிகவும் பொதுவான காரணமாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

• உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துகளான வைட்டமின் பி12, பி6 போன்ற வைட்டமின்கள் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம். மது அருந்துதல் நரம்புகளை சேதப்படுத்தி நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

• உடற்பயிற்சி மற்றும் உற்சாக காரணங்களுக்காக விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள், வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம். சில தொற்று நோய்கள் நரம்புகளை பாதித்து நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஹெர்பெஸ் வைரஸ், லைம் நோய் போன்றவை.

• உடலின் இயக்கங்களை முடக்கி விடக்கூடிய முடக்கு வாதம், லூபஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் நரம்புகளைத் தாக்கி நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம்.

• புற்றுநோய்க்கு சிகிச்சையாக கொடுக்கப்படும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை நரம்புகளை சேதப்படுத்தி நரம்புத்தளர்ச்சி ஏற்படுத்தலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0